மூன்றே படிகள் தான். 1. இங்கு போய் ஒரு பயனர்கணக்கை உருவாக்குங்கள். 2. அங்கு உங்கள் இணைய உலாவி( IE, Firefox ) எதுவோ அதுக்கு ஏற்றார்போல் பொத்தானை உங்கள் உலாவியில் இணைத்துக்கொள்ள நீட்சி( extension) கொடுப்பார்கள் அதை நிறுவிக்கொள்ளுங்கள்.உங்கள் உலாவியில் buttonகளும் menuவும் வந்துவிடும் step -2 ஐ நீங்கள் உபயோகப்படுத்தும் அனைத்து கணினிகளிலிலும் செய்துவிடுங்கள். ஆச்சா, அடுத்து 3. எப்படி உபயோகிப்பது... இப்போ ஒரு பிடித்த பக்கத்தை படிக்கிறீர்கள். படித்தவுடன், இந்த tag பொத்தானை ஒரு அமுக்... அடுத்து இப்படி ஒரு சின்ன சன்னல் வரும். அதில் நீங்கள் உங்களுக்கு ஏற்றமாதிரி tag போட்டு வைத்துக்கொள்ளலாம். இதில் நான் do not shareஐ check பண்ணி அடுத்தவர் நான் என்ன சேமித்திருக்கிறேன் என்று பார்க்காமல் இருக்க வழி பண்ணி இருக்கிறேன். உங்கள் நண்பர்களோடு பார்த்து பகிர default ஆக விட்டுவிட்டால் அடுத்தவர்களும் உங்களுடையதை பார்த்துக்கொள்ளலாம். என்ன பயன் 1. tagகள் மக்கள் எதை படிக்கிறார்கள் என்று trend analysis பண்ண உதவும் 2. உங்களுக்கேற்ற வகையில் வகைப்படுத்தி வைத்துகொள்ள. 3. நண்பர்களுடன் பகிர உங்களுக்குள்ளே குழுவாக பகிர...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...