வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க.
காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது.
நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-)
இது சும்மா
இது நம்ம working table :-)
படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4ல வலது கீழே இருக்கறத பாத்துக்குங்க, அது நடுவர்களுக்கு. பாத்துட்டு தீர்ப்பு சொல்லுங்க ;-)
கருத்துகள்
ஆவி பறக்கர மாதிரி ஊதுவத்தீ கொளுத்தி எடுத்துப் பாருங்களேன் இன்னொண்ணு ;)
நன்றி.
\\ஊதுவத்தீ கொளுத்தி எடுத்துப் \\
அந்த கொடுமையை ஏன் கேக்கறீங்க. மொத்தமா மூட்டைய கட்டிகிட்டு ஊருக்கு போறம்னு இருக்கற எல்லாத்தையும் காலி பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல ஊதுவத்தியும் காலி. நான் இருக்கற பகுதில சுத்துப்பட்டு 18 பட்டிலயும் இந்தியக்கடைகள் கிடையாது. சரி இன்னொரு முறை பாத்துக்கலாம் அப்பிடின்னு விட்டாச்சு.
நன்றி.
ஒப்பாரி,
நன்றி, உங்களைவிடவா?
I have also sent my photo to this contest.. but, I didnt try this much.. just a click, thats it !! :P
All the best!!
thnx
நன்றி,
அனானி,
கட்டாயம் முயலுகிறேன். ஆனா,
எப்படி உங்களுக்கு சொல்றது முயற்சி பண்ணின அப்புறம் ;-)